வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை பிரதமரிடம் கையளிப்பு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, July 18, 2020

வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை பிரதமரிடம் கையளிப்பு

நவம்பர் 16 தேசிய இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை நேற்று (2020.07.17) அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐபெரும் யோசனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி குணதாச அமரசேகரஇ ஐந்து வருடங்களின் பின்னர் முழுமையான நாட்டு மக்களுக்காக யோசனை ஒன்றை சமர்ப்பிப்பதற்கான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்இ இந்த யோசனை செயற்படுத்தப்படும் என்ற பாரிய நம்பிக்கையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டதாக கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒப்பந்தம் சமர்ப்பிப்பது தொடர்பில் நவம்பர் 16 தேசிய இயக்கத்திற்கு பிரதமர் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உட்பட மகா சங்கத்தினர் மற்றும் நவம்பர் 16 தேசிய அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய வல்லுனர்கள் சிலரும் இணைந்திருந்தனர்.

No comments:

Post a Comment