ராஜாங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட 139 பேருக்கான பிசிஆர் பரிசோதனையில் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு மட்டுமே வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு மாநகர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட 174 பேருக்கான பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை, மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதனையின் பிரகாரம் கந்தக்காடு பிரிவில் ஏற்பட்ட வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விரைவில் இயல்புநிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். -  MOD
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது       2020-07-18 18:50:17
2703
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
669
சிகிச்சை பெறும் நோயாளிகள்
6
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
2023
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
11
இறப்பு எண்ணிக்கை