ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பொதுஜன பெரமுன விடன் இணைந்தனர்.


ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இரு வேட்பாளர்களும் இதனை அறிவித்தனர்.பொதுஜன பெரமுன மாத்தறை மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.மாத்தறை மாவட்டத்தில் இருந்து போட்டியிட UNP ஊடாக வேட்பு மனுக்களை சமர்ப்பித்த சந்தன பிரியந்தா மற்றும் எஸ்.டபிள்யு. பிரேமரத்ன ஆகியோரே இவ்வாறு இணைந்தனர்.