இம்முறை பொது தேர்தலில் வெற்றி பெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு தனித்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (09) கேகாலை மாவட்டத்தின் தெதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீகொத்தவை கைப்பற்றும் கட்சிக்கு அல்ல அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிக்கு இம்முறை தேர்தலில் தங்கள் பெறுமதியான வாக்குகளை வழங்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர், இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பதனை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரத்தை உறுதி செய்த பின்னர் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைகள் ஊடாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் தடைப்பட்ட நாட்டின் அபிவிருத்தி செயற்பாடு மீண்டும் செயற்படுத்தப்படும் என பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிச்சாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், தாரக பாலசூரிய ஆகிய உறுப்பினர்கள் உட்பட இம்முறை பொது தேர்தலில் போட்யிடும் வேட்பாளர்களும் இணைந்திரு
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK