ஹஸ்பர் ஏ ஹலீம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலினை முன்னிட்டு மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய  மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் முன்னிலையில் இணைந்து கொண்டார்கள்.


குறித்த நிகழ்வு நேற்று (07) இடம் பெற்றுள்ளதோடு இதில் குச்சவெளி சல்லிமுனை ,இறக்கக்கண்டி உட்பட பல மாற்று கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி, பொதுஜன பெரமுன போன்ற  ஆதரவாளர்கள் பலர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் வெற்றிக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரீஸுடன் இணைந்து கொண்டார்கள்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலினை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றார்கள்.