அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி..!: ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு தொற்றில்லை - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி..!: ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு தொற்றில்லை

பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மும்பை நானாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கும் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“நான் கொரோனா பரிசோதனை செய்தேன் . அதனையடுத்து வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டேன் . குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்
.


இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment