14 நாள் தனிமைப்படுத்தலில் ஐஸ்வர்யா ராயும் அவரது மாமியாரும் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

14 நாள் தனிமைப்படுத்தலில் ஐஸ்வர்யா ராயும் அவரது மாமியாரும்

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமியார் ஜெயா பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது அவர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிள் தெரியவந்துள்ளது சனிக்கிழமை அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மும்மை மேயர் கிஷோரி பெட்னேகர், “ஜெயா பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் நேற்று இரவு பாதுகாப்பான உடையணிந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் அவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது தெரியவந்தது.

எனினும் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்ததும் அவர்களிடம் மீண்டும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.

இன்று காலை தொற்று நீக்க குழுவினர் அமிதாப் பச்சனின் இல்லத்தில் சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுத்திருந்தனர். தற்போது அவர்களது இல்லம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், யாரும் வீட்டிற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கான கண்காணிப்பில் மும்பை பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்கள் நடவடிக்கை மாத்திரம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கிஷோரி பெட்னேகர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment