-சில்மியா யூசுப் -  

எந்த சிறுபான்மை கட்சிகளும் எங்களது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜி தெரிவித்தார்.

 எதிர்வரும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்திலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக மொட்டு சின்னத்தில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உவைஸ் ஹாஜி உரையாட்டும்போது இவ்வாறு விளக்கமளித்தார்.

"எமது அரசாங்கத்திற்கு வேறு பங்காளிக் கட்சிகள் இல்லை என குறிப்பிடுவதுடன் இதுபற்றி சில சில்லறை கட்சிகள் கூறித்திரிகின்றனர். ஆனால் அவர்கள் எங்களது பங்காளி கட்சிகள் இல்லை என்பதனை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் உரையாட்டுகையில், சிறந்த ஆளுமையுள்ள இளம் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி எமது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.