எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினம் இன்றாகும்(26).
இதுவரை 80 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
குறித்த காலப் பகுதியில் தமக்கான வாக்காளர் அட்டைகளை பெறவில்லை எனெனில், அருகில் உள்ள தபால் நிலையத்தில் முறையிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.