முஸ்லிம்கள் பெரும்பான்மை கட்சிகளோடு சென்றால் தான் தங்களது தேவைகளையும், அபிலாசைகளையும் நிறைவேற்ற முடியும் A.L.M.உவைஸ் ஹாஜியார் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Monday, July 6, 2020

முஸ்லிம்கள் பெரும்பான்மை கட்சிகளோடு சென்றால் தான் தங்களது தேவைகளையும், அபிலாசைகளையும் நிறைவேற்ற முடியும் A.L.M.உவைஸ் ஹாஜியார்


சில்மியா யூசுப்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் A.L.M.உவைஸ் ஹாஜியார் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று அண்மையில்  கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர்கள்,
வர்த்தகள்கள்  , பொதுமக்கள்  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு  உரையாட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் அமைப்பாளர் உவைஸ் ஹாஜியார்

" எமக்கான ஒரு பலமிக்க அரசாங்கம் தேவை. அதற்கு சிறுபான்மையினராக இருக்கும் நாம் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதி கூடிய வாக்குகளை பெற்று கொடுத்து முஸ்லிம்களின் நலனுக்காக நாம் செயற்பட வேண்டும்.

எமது முஸ்லிம்களின் ஒரு சிறந்த ஆளுமைமிக்க தலைவராக ,  ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாம் அவரை ஆதரிக்க வேண்டும். எனவே எமது சமுதாயத்தில் நலனுக்காக பாடுபடும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் தேசிய பட்டியலில் இருப்பதையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவராக இருப்பதையும் நினைத்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்"


மேலும் அவர் தொடர்ந்தும் உரையாட்டுகையில், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து பெரும்பான்மை கட்சிகளோடு சென்றால் தான் தங்களது தேவைகளையும், அபிலாசைகளையும் நிறைவேற்ற முடியும் அத்தோடு நாடும் ஒரு அமைதியான நாடாக அமையும் என தன் உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment