கடந்த இரண்டு நாட்களாக களத்தில் நின்று வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரசியல் நிலமைகளை அவதானித்து விட்டு சற்று முன்னரே கொழும்பில் உள்ள எனது வீடு வந்தடைந்தேன்.

தொடர்ச்சியான பயணம், ட்ரைவிங், சரியான தூக்கமின்மை (கடந்தக 48 மணிநேரத்தில் 4 மணித்தியாலங்கள் மட்டுமே தூங்கக் கிடைத்தது) என்பவற்றால் மிகவும் உடல் ரீதியாக சோர்வடைந்திருக்கின்றேன்.

ஆனால் உள்ளமோ பல மடங்கு மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்கின்றது. காரணம் நான் நேரில் கண்ட அரசியல் களநிலவரம். ACMC மற்றும் SLMC ஆதரவாளர்கள் ஒரே சின்னத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்குகளுக்கான ஒரு போட்டி இம்முறை களத்தில் இல்லை.

ACMC இன் நிரந்தர தமிழ் ஆதரவாளர்கள் நன்றி மறக்காமல் தமது நன்றியுணர்வை இம்முறையும் அதன் தலைமைத்துவத்திற்கு வழங்கக் காத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.

ஒரு சிலர் தமது தனிப்பட்ட விடயங்கள் காரணமாக மாற்று அணிக்கு சென்றாலும் கூட அவர்களைப் போல பல மடங்கு புதியவர்கள் இந்த தொலைபேசிச் சின்ன அணிக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர சஜித் பிரேமதாச அவர்களை விரும்பும் தமிழ் மக்களும் இம்முறை இந்த அணிக்கு வாக்களிக்க உள்ளனர்.

ஆகவே இம்முறை வன்னியில் முன்னாள் அமைச்சரின் தோல்வியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கிடைப்பது உறுதி இன்ஷா அல்லாஹ். ஏழைகளின் துஆ பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது. அவரின் வெற்றிக்கு சந்தேகம் தேவையில்லை இன்ஷா அல்லாஹ்….

இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் இரண்டாவது ஆசனம் உறுதியாகும். அப்படி நடந்தால் அதற்குரிய புகழனைத்தும் பல பிரிவுகளாக பிரிந்து நின்று வன்னி மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் தமிழ் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள், பேரினவாத கட்சிகளுக்காக வாக்குகளை சேகரிக்கும் தமிழ் வேட்பாளர்கள் என அத்தனை பேரையும் சாரும்.

இம்முறை வன்னியில் என்ன விலை கொடுத்தாவது ஒரு ஆசனத்தை பெரும்பான்மை சமூகத்திற்கு எடுத்தே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் இனவாத சக்திகளுக்கு இம்மாவட்ட சிறுபான்மை வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் தேடிக் கொடுக்கும் வாக்குகள் உதவி செய்யுமா அல்லது பெரும்பான்மை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் உதவி மற்றும் வாக்குகள் ஒரு சிறுபான்மை வேட்பாளரின் வெற்றிக்கு உதவுமா என்பது களத்தில் உள்ள சாதாரண அரசியல் அறிவு பெற்றோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

யார் யாருக்கு ஏணி….காலம் பதில் சொல்லட்டும்.

“சுயநலன்களுக்காக சமூகத்தை விற்கும் எமது அரசியல் வாதிகளை விட தனது இனத்திற்காக குரல் கொடுத்து அதற்காக இனவாதிப் பட்டம் சுமந்து நிற்கும் அந்த மனிதரை நான் மதிக்கிறேன். அவருக்காக எனது வாக்கை இம்முறை பயன்படுத்தப் போவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” மல்லாவிப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாக்காளனின் குரல்…..அவரது நம்பிக்கை வீண் போகாது என நினைக்கிறேன்….

பி.கு. வன்னி மாவட்ட தமிழ் அரசியல் திட்டமிடப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கூறும்…..

காலம் கடந்த ஞானம்……அதாவது சுடலை ஞானம்…..இது ஆரோக்கியமானதல்ல….

தேர்தல் முடிவுகளை துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால் தேர்தல் திணைக்களத்தின் பணியினை அதனிடமே ஒப்படைக்க விரும்புகிறேன்.கடந்த இரண்டு நாட்களாக களத்தில் நின்று வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரசியல் நிலமைகளை அவதானித்து விட்டு சற்று முன்னரே கொழும்பில் உள்ள எனது வீடு வந்தடைந்தேன்.

தொடர்ச்சியான பயணம், ட்ரைவிங், சரியான தூக்கமின்மை (கடந்தக 48 மணிநேரத்தில் 4 மணித்தியாலங்கள் மட்டுமே தூங்கக் கிடைத்தது.) என்பவற்றால் மிகவும் உடல் ரீதியாக சோர்வடைந்திருக்கின்றேன்.

ஆனால் உள்ளமோ பல மடங்கு மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்கின்றது. காரணம் நான் நேரில் கண்ட அரசியல் களநிலவரம். ACMC மற்றும் SLMC ஆதரவாளர்கள் ஒரே சின்னத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்குகளுக்கான ஒரு போட்டி இம்முறை களத்தில் இல்லை.

ACMC இன் நிரந்தர தமிழ் ஆதரவாளர்கள் நன்றி மறக்காமல் தமது நன்றியுணர்வை இம்முறையும் அதன் தலைமைத்துவத்திற்கு வழங்கக் காத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.

ஒரு சிலர் தமது தனிப்பட்ட விடயங்கள் காரணமாக மாற்று அணிக்கு சென்றாலும் கூட அவர்களைப் போல பல மடங்கு புதியவர்கள் இந்த தொலைபேசிச் சின்ன அணிக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர சஜித் பிரேமதாச அவர்களை விரும்பும் தமிழ் மக்களும் இம்முறை இந்த அணிக்கு வாக்களிக்க உள்ளனர்.

ஆகவே இம்முறை வன்னியில் முன்னாள் அமைச்சரின் தோல்வியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கிடைப்பது உறுதி இன்ஷா அல்லாஹ். ஏழைகளின் துஆ பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது. அவரின் வெற்றிக்கு சந்தேகம் தேவையில்லை இன்ஷா அல்லாஹ்….

இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் இரண்டாவது ஆசனம் உறுதியாகும். அப்படி நடந்தால் அதற்குரிய புகழனைத்தும் பல பிரிவுகளாக பிரிந்து நின்று வன்னி மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் தமிழ் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள், பேரினவாத கட்சிகளுக்காக வாக்குகளை சேகரிக்கும் தமிழ் வேட்பாளர்கள் என அத்தனை பேரையும் சாரும்.

இம்முறை வன்னியில் என்ன விலை கொடுத்தாவது ஒரு ஆசனத்தை பெரும்பான்மை சமூகத்திற்கு எடுத்தே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் இனவாத சக்திகளுக்கு இம்மாவட்ட சிறுபான்மை வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் தேடிக் கொடுக்கும் வாக்குகள் உதவி செய்யுமா அல்லது பெரும்பான்மை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் உதவி மற்றும் வாக்குகள் ஒரு சிறுபான்மை வேட்பாளரின் வெற்றிக்கு உதவுமா என்பது களத்தில் உள்ள சாதாரண அரசியல் அறிவு பெற்றோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

யார் யாருக்கு ஏணி….காலம் பதில் சொல்லட்டும்.

“சுயநலன்களுக்காக சமூகத்தை விற்கும் எமது அரசியல் வாதிகளை விட தனது இனத்திற்காக குரல் கொடுத்து அதற்காக இனவாதிப் பட்டம் சுமந்து நிற்கும் அந்த மனிதரை நான் மதிக்கிறேன். அவருக்காக எனது வாக்கை இம்முறை பயன்படுத்தப் போவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” மல்லாவிப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாக்காளனின் குரல்…..அவரது நம்பிக்கை வீண் போகாது என நினைக்கிறேன்….

பி.கு. வன்னி மாவட்ட தமிழ் அரசியல் திட்டமிடப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கூறும்…..

காலம் கடந்த ஞானம்……அதாவது சுடலை ஞானம்…..இது ஆரோக்கியமானதல்ல….

தேர்தல் முடிவுகளை துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால் தேர்தல் திணைக்களத்தின் பணியினை அதனிடமே ஒப்படைக்க விரும்புகிறேன்.