எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ஆகியோருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தபபடும். முஸ்லிம் மக்கள எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து அச்சமயம் விரிவாக சுடடிக்காட்ட படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், முன்னாள அமைச்சருமான எம். எஸ். அமீர் அலி தெரிவித்தார். தனியார் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சவால் என்ற அரசியல் நிகழ்வில் கலந்து கொண்டே இதனை தெரிவித்தார்.
இந்த அரசியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ், சிறுபான்மை இனங் களின் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்து கின்ற கட்சிகள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அண்மை யில் பிரதமர் வேண்டுகோள் விடுத் திருந்தமை தொடர்பாக கேட்ட போதே அமீர் அலி இவ்வாறு பதிலளித்தார்.
இந்நாட்டில் சிறு பான்மை இனங்களான தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவற்றை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் இதுவரை முறையாக காணப்பட வில்லை .
மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இப்பிரச்சினையை தீர்க்க முனைந் தாலும் அவை இன்று வரை தீர்க் கப்படாமலேயே உள்ளது.
எனவே இதற்கு ஒரு நிலையான தீர்வு காணப்படுவது அவசிய தேவையாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சி னைகளை நன்கு அலசி ஆராய்ந்து தீர்க்கக் கூடிய ஒரு வல்லமை பொருந்திய அரசாங்கமாக காணப் படுகின்றது.
குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமிழர் மற்றும் முஸ் லிம்களின் பிரச்சினைகளை நன்கு விளங்கிக் கொண்டவராக காணப்படுகின்றார். எனவே தேர்தல் முடிவடைந்த பின்னர் அவருடன் இந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந் துரையாடப்படும் எனவும் அமீர் அலி தெரிவித்தார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK