(நா.தனுஜா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்திக் கொடி நட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயன்படுத்தி அதன் ஊடாக  வெற்றியைப் பெற்றுக்கொண்ட சூத்திரத்தை மீளப்புதுப்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.   


இதன் ஓரங்கமாகவே மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன், ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மையமாகக் கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் பரப்பி வருகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.


ஆளுந்தரப்பினரின் பொதுத்தேர்தல் பிரசார உத்தி என்று சாடியிருக்கும் மங்கள சமரவீர, இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை  செய்திருக்கிறார். அப்பதிவில் அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.