திகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி முஷாரப்பை ஆதரித்து, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், நேற்று (26) பொத்துவில், ஹிதாயபுரம் பகுதியில் இடம்பெற்றது.
கட்சியின் வட்டார அமைப்பாளர் சகோதரர் மனாப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதேச சபை உறுப்பினர் என்.எச்.முனாஸ், அப்துல் ஹக் மௌலவி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பெருந்திரளான மக்கள் வெள்ளம் புடைசூழ உரையாற்றிய சட்டத்தரணி முஷாரப்பை, பிரதேசவாழ் மக்கள் தோள்களில் சுமந்து, பவனியாக அழைத்து சென்று, பெரும் ஆதரவையும் வரவேற்பையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.