சமூகக் கலவரங்களில் மக்களை பாதுகாக்க களத்தில் நின்ற காவலன்...! - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Thursday, June 25, 2020

சமூகக் கலவரங்களில் மக்களை பாதுகாக்க களத்தில் நின்ற காவலன்...!

இத்ரீஸ் நிசார் -
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கடும் போட்டிகள் நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் தடுமாறும் வாக்காளர்கள், ஆதரவாளர்கள் இம்முறை நிதானமாகச் சிந்திக்கும் நிலைமைகளே ஏற்படும். சமூகத் தலைவர்கள் எனக்கூறுவோரின் சாதனைகள், சரித்திரங்களை மீட்டிப் பார்ப்பதற்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த காலப்பதிவுகளே மக்களுக்கு உதவவுள்ளன.
துரதிஷ்டவசமா,க கடந்த காலத்தில் அரங்கேற்றப்பட்ட சமூக அக்கிரமங்களை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களப்பணியாற்றியமைக்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளன. அந்த வகையில் கண்டிக் கலவரங்களிலும் காடையர்களின் வெறியாட்டங்களிலும் சளைக்காதும், களைக்காதும் களத்தில் நின்ற சமூகக் காவலனாக ரிஷாட் பதியுதீனைப் பார்க்க முடியும். அமைச்சரவையில் இருந்தவாறே, இவ்வாறான சமூகப் பதற்றங்கள் நிகழ்வதைத் தடுக்கத் தவறிய அனைத்து அரச அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் உயரதிகாரிகள், பாதுகாப்பு, உளவுத் துறைக்குப் பொறுப்பானவர்களையும் ரிஷாட் பதியுதீன் கடுமையாக விமர்சித்தது மட்டுமன்றி, கண்டிக்கவும் செய்தார்.
இத்துடன் மட்டும் இவரது சமூகப்பணிகள் நிற்கவில்லை. குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்புடையோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, தண்டனை வழங்கும்படியும் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார்.

No comments:

Post a Comment