“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Tuesday, June 23, 2020

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை


பொத்துவில்லில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காதுதிடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்றுகாணிகளை அளவீடு செய்வதும்அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்றுமக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு செய்வதற்கு முஷர்ரப் என்பவர் தடையாக இருப்பது நியாயமா?” என ஊடகவியலாளர் ஒருவர், நேற்று (20) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேள்வி எழுப்பியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பலாத்காரமாகவும் அடாத்தாகவும் அங்கு சென்றுமக்களின் பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதனால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுமுதலில் பிரதேசவாழ் மக்களோடு பேசவேண்டும். குறிப்பாக பிரதேச செயலாளர்கிராம சேவையாளர் வாயிலாக பள்ளி நிர்வாகம்மக்களின் பிரதிநிதிகளுக்கு இதனை தெளிவுபடுத்துவதோடுஅவர்களின் கருத்துக்களையும் உளவாங்கியிருக்க வேண்டும்.

மக்களின் பூர்வீக விடயங்கள்உறுதிப்பத்திரம் மற்றும் இதுதொடர்பிலான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையான செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னரேஇதுதொடர்பிலான நடவடிக்கை எடுப்பது சரியானது” என்று கூறினார்.

No comments:

Post a Comment