வெலிக்கட சிறைச்சாலை வளாகத்திற்குள் பெரும் பதற்றம்! வீசப்பட்ட மர்மப்பொதி - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Friday, June 26, 2020

வெலிக்கட சிறைச்சாலை வளாகத்திற்குள் பெரும் பதற்றம்! வீசப்பட்ட மர்மப்பொதி

கொழும்பு வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தின் பின் பகுதியில் இனந்தெரியாத நபரால் வீசப்பட்ட பொதி ஒன்றினால் அப்பகுதியில் இன்று நண்பகல் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு அடங்கிய பொதி போன்று இந்த பொதி காணப்பட்டதால் இது தொடர்பில் உடனடியாக பொறளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினர் மற்றும் குண்டு செயலிழப்பு பிரிவினரும் விரைந்து சென்றுள்ளனர்.

வீசப்பட்டிருந்த பொதியை சோதனையிட்டதில் பொதியில் கையடக்கத் தொலைபேசி, சார்ஜர், ஐஸ் போதைப்பொருள் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இவ்வாறான பொதி சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்டதால், கைதி ஒருவருக்காக வெளியிலிருந்து ஒருவர் அவருக்கு வழங்க செய்த முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொறளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment