நான் பிரதமராகி 24 மணி நேரத்திற்குள் எரிபொருள் விலையைக் குறைப்பேன் – சஜித் உறுதி - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Wednesday, June 24, 2020

நான் பிரதமராகி 24 மணி நேரத்திற்குள் எரிபொருள் விலையைக் குறைப்பேன் – சஜித் உறுதி

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்து 24 மணி நேரத்திற்கு முன்னர் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்ததாவது,
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்தபோதிலும் , அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் காரணமாக இலங்கையில் எண்ணெய் விலை குறைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தான் அரசாங்கத்தை அமைத்ததன் பின் பொருளாதாரம் மீட்டெடுக்கும் வரை ஏழைகளுக்கு வழங்கப்படும் 20,000 கொடுப்பனவு பணக்காரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment