மு.கா வின் 04 மாதர் அமைப்புக்கள் 200 பெண் உறுப்பினர்களுடன் மக்கள் காங்கிரஸில் இணைவு..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஸாட் பதியுதின் அவர்கள் கடந்த 22, 23 ம் திகதி (திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில்) அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.இ.ம.கா போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்த சிறிய பிரச்சார நிகழ்வு, வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் போராளிகளுடனான விசேட சந்திப்புகளிளும் கலந்து கொண்டிருந்தார்.
அதன் ஓர் அங்கமாக ( 23 ) செவ்வாய் மாவடிப்பள்ளிக்கு விஜயம் செய்த தலைவரை வரவேற்று நன்றி தெரிவித்து கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை அ.இ.ம.காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவும், காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான எம். ஜலீல் ஆகியோரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந் நிகழ்வில் கடந்த பல வருடங்களாக முஸ்லீம் காங்கிரஸ் கட்சியோடு பயணித்த 04 மாதர் சங்கங்களும், அதன் 200 பெண் உறுப்பினர்களும் மு.கா வின் தற்போதைய அரசியல் வழிநடாத்தல்கள், தலைமையின் போலி வாக்குறுதிகள், கட்சியின் ஏமாற்று அபிவிருத்தி திட்டங்கள் போன்றனவற்றால் அதிர்ப்தியடைந்து தற்கால சூழ்நிலையில் முஸ்லீம் சமூகத்துக்காக பல கஷ்டங்கள், துன்பங்களை அனுபவித்து சமூகத்துக்காகப் போராடும் ரிஸாட் பதியுதீனின் ஆளுமையை அறிந்தும், மாவடிப்பள்ளிக்கு பலகோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திகளுக்கான நிதிகளை அள்ளி வழங்கி எமது ஊரை கௌரவப்படுத்திய தலைமையின் கரங்களையும், கட்சியையும் பலப்படுத்துவதற்காக தலைமையின் முன்னிலையில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர். 

குறிப்பாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மு.கா வில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவரும் இணைந்து கொண்டார் என்பது சிறப்பம்சமாகும். இந் நிகழ்வில் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஸாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீரலி, கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர் சுபைதின் ஹாஜியார், கட்சியின் பொருளாளர் முன்னாள் பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, பாராளுமன்றத் தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களான முஸாரப், மாஹிர், ஜவாத் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
எனவே நாள்தோறும் நாட்டின் நாலாபுறமிருந்தும் கட்சிக்காகவும் ஆளுமையுள்ள தலைமையையும் ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து கொள்கின்றனர். எனவே போலி அரசியல் கூடாறங்களில் இருந்து காலாகாலம் ஏமாற்றப்பட்டு மீண்டும் அதே சாக்கடை அரசியல் கட்சிகளோடு பயணிக்காமல் சமூகத்துக்கு பயனுள்ள சமூகத்தின் விடிவுக்காகவும், அபிவிருத்திக்காகவும் பயணிக்கும் அ.இ.ம.காங்கிரஸில் இணைந்து கொண்டு பயணிக்குமாறு வேண்டுகின்றோம்.BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK