இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கிரிகெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிகெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, போட்டிகளை நடத்துவதற்கான சூழ்நிலை இலங்கையில் இல்லாத நிலையில், தமது வீரர்களை அனுப்புவதற்கான வாய்ப்பு இல்லை என பங்களாதேஷ் கிரிகெட் சபை தெரிவித்துள்ளது. 

இந்த நிலையிலேயே, இரு அணிகளுக்கும் இடையிலான போட்டித் தொடரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிளைக் கொண்ட கிரிகெட் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கையில் நடைபெறவிருந்தது. இதேவேளை, டெஸ்ட் தொடருக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஶ்இலங்கை கிரிகெட் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.