ஆபத்தை சுட்டிக் காட்டவே இப்பதிவு, விபரீதம் செய்து விடாதீர்கள்

அல்ஹம்துலில்லாஹ்..  ரமலான் நெருங்கி விட்டது. நாமெல்லாம் மகிழ்வோடு வரவேற்க தயாராகிவிட்டோம். 

இன்ஷா அல்லாஹ் பிறை கண்ட நாள் முதல் பள்ளியில் தொழ வரும் மக்கள் கூட்டமும் நிறையவே இருக்கும். 

இதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய இடம் சிறுவர்களின் வருகையைத்தான். சிறுவர்கள் நிறைய பேர் வருவார்கள். அவர்களை விரட்டி அடிக்கவும் ஒரு கூட்டம் வரும். அந்த ஆபத்தை சுட்டிக் காட்டவே இப்பதிவு. 

இன்றைய குழந்தைகள் நாளைய தொழுகையாளிகள். அவர்கள் விளையாடவே விரும்புவார்கள். இமாம் ருகூஃ போகும் வரை அரட்டை அடிப்பார்கள். இன்னும் பல சேட்டைகளை செய்வார்கள். அது அவர்களின் விளையாட்டுப் பருவத்துடன் கூடிய ஒரு நிலைபாடு. 

அதை நாம் சகிக்க வேண்டும். தொழுகைக்கு இடையாறு என்று நினைக்க கூடாது. முடிந்தால் அமைதியாக சொல்ல வேண்டும். சப்தம் போட்டு கத்தக் கூடாது. அப்படிச் செய்பவர் நானும் பள்ளிவாசலுக்கு வந்திருக்கேன் பார் என்று காண்பிப்பது போலாகும். மேலும் வீட்டில் எந்த அதிகாரமும் செல்லாது என்பதால், குழந்தைகளிடம் அதிகாரம் காண்பித்து மகிழ்ந்து கொள்வதாகும். 

எனவே பள்ளிக்கு குழந்தைகள் வரவேண்டாம் என்று தடுப்பதோ வந்தவர்களை விரட்டுவதோ நற்செயல் அல்ல. மாறாக அது தீமையாகும். 

ஒருவரை பள்ளிக்கு அழைத்து வர பல முறை பேசினோம். வரவில்லை. ஏன் இவ்வளவு அடம்பிடித்து வர மறுக்கிறீர் என்று கேட்டபோது சிறுவயதில் அவருக்கு பள்ளியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வைக் கூறினார். 

சிறுவனாக இருந்த அவர் ஒளு செய்து விட்டு உள்ளே போனபோது குதிகால் பக்கம் தண்ணீர் படவில்லை என்று ஒரு பெரிய மனுஷன் சப்தம் போட்டு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்து அசிங்கப்படுத்தி திட்டினார். 

அன்று முதல் பள்ளிக்கு நான் வருவதே இல்லை என்றார். சிலரின் செயல் எவ்வளவு விபரீதம் ஆகிறது பார்த்தீர்களா? அவர் தொழாமலே இருந்து மரணித்து மறுமையில் சென்று இதே காரணத்தை அல்லாஹ்விடம் சொன்னால் விபரீதம் எப்படி இருக்கும்? 

இமாம்களே, பள்ளிக்கு வரும் குழந்தைகளை யாரும் விரட்ட வேண்டாம் என்று அறிவிப்பு செய்யுங்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தொழுகைக்குப் பின் இனிப்பு ஏதாவது கொடுக்கச் சொல்லுங்கள். 

அடுத்த தலைமுறை தானாக பள்ளிக்கு வரும். முயற்சியுங்கள். நன்மைகள் நடக்கட்டும்.

AZEEM MOHAMMED

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்