மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க சீன அரசசாங்கம் இணக்கம்

 




பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க சீன அரசசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.


அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைத் துணிகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளன.


அதன் முதல் தொகுதி இம்மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


எஞ்சிய தொகை அடுத்த மாதம் கிடைக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


2025ஆம் வருடத்திற்கான பாடசாலை சீருடைத் துணி தேவை 1.82 மில்லியன் மீட்டர்கள் ஆகும்.


இதன்படி அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் உரிய நேரத்தில் பாடசாலை சீருடைத் துணிகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Fazu

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்