துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

 




பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உரிமம் கொண்ட துப்பாக்கிகளை மீண்டும் கையளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதன்படி நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


துப்பாக்கிகளை மீண்டும் கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதுடன் அந்த காலம் இன்றுடன் நிறைவடையவிருந்தது.


எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு, காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிர் பாதுகாப்பிற்காக உரிமத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பரிசீலனை செய்த பின்னர், மீளப்பெறுவதைக் கருத்தில் கொண்டு துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


கடற்படையின் வெலிசறையில் அமைந்துள்ள அரசாங்கத்தின் வர்த்தக வெடிபொருள் களஞ்சியத்திற்கு இந்த துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


எனினும் பெருமளவிலான மக்கள் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்களுக்கு குறித்த துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்காக இவ்வாறு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Fazu

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்