சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி விசேட தொலைபேசி இலக்கம்

 




சுற்றுலாப் பயணியாக அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு இலங்கை பொலிஸ் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கும் நோக்கில், குறித்த தொலைபேசி எண்ணுக்கு நேரடியாக அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு காவல்துறை அவர்களுக்குத் தெரிவிக்கிறது.


அதற்கமைய , 071-8592651 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு இலங்கை பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


இந்த தொலைபேசி இலக்கம் பொலிஸ் சுற்றுலா மற்றும் கடல்சார் பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி தமயந்த விஜய ஸ்ரீக்கு சொந்தமானது எனவும், அவர் தேவையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் வழங்கும் போது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதால் அவர் கேட்கும் தகவல்களை தயவு செய்து தருமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Fazu

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்