எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக காலி மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி கூறுகிறார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கு தபால் மூல வாக்களிப்பதற்காக 1,576 அரச ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.
அவசர நிலை ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக 600 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், வாக்குப்பெட்டிகள் நாளை (25) காலை விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படும் எனவும், இரவு 10.00 மணிக்குள் வாக்குகளின் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நாளை (26) நடைபெறவுள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK