கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவை 10 மாதங்களின் பின்னர் இவ்வாறு மீள ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் மார்க்கம் 100 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருப்பதால் அதன் புனரமைப்பு பணிகளுக்கு இவ்வாறு நீண்டகாலம் எடுத்துள்ளது.
மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் மார்க்கத்தை சீர் செய்யும் பணிகள் பல கட்டங்களாக இடம்பெற்றன. மஹவ முதல் அனுராதபுரம் வரையான அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பமாகியுள்ளது.
யாழ்தேவி மற்றும் ரஜரட்ட ரெஜின ஆகிய ரயில்கள் இவ்வாறு சேவையில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய காங்கேசன்துறையிலிருந்து பயணிக்கும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து இன்று காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பித்தது. குறித்த ரயில் இன்று காலை 8.20க்கு மஹவ ரயில் நிலையத்தை சென்றடைந்ததுடன் பிற்பகல் 1.23க்கு காங்கேசன்துறையை அடையும்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK