ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.


ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது அவர் தனது வாழ்த்துக்களை பிரதமருக்கு தெரிவித்ததுடன், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புக்களையும் உறுதிப்படுத்தினார். 

இலங்கையின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் டிஜிட்டல்மயப்படுத்தலுக்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. 

குறித்த சந்திப்பின் போது மகளிருக்கான ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் மகளிருக்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க ஆர்வமுடன் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் உட்பட ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த Patrick Mc Carthy  மற்றும் நெத்மினி மெதவல ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்