"அக்டோபர் 8 ஆம் தேதி தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு" இலங்கை பிரதமர் மற்றும் நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் 'தேசிய ஓய்வூதிய தின' வாழ்த்துச் செய்தி.
நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் தொழிற் படையின் ஒரு பங்காளியாக இருந்து தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அரச பணி ஆற்றியவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளின் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 'தேசிய ஓய்வூதிய தினம்' என்பது பல தசாப்தகால அவர்களின் சேவைக்கான ஒரு அடையாள பாராட்டு மட்டுமேயாகும். அவர்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுவூட்டுவதே ஒரு முன்னேற்றமான தேசமாக வழங்கக்கூடிய உயர்ந்த கௌரவமாகும்.
பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு பலமான பிரஜையாக மட்டுமன்றி, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜையாகிய உங்களுக்கு தேகாரோக்கியத்துடனும் ஆன்மீகம் மற்றும் கலாசார ரீதியாகவும் திருப்திகரமான ஒரு பிரஜையாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எங்களின் முழுமையான பொறுப்பாகும்.
பாதுகாப்பான சமூகம் மற்றும் வளமான நாடு என்ற தொலைநோக்குடன் செயற்படும் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளில் தேசிய ஓய்வூதியக் கொள்கைகளை நிலைபேறாகவும் தொடர்ச்சியாகவும் பேணுவதற்கு முறைசார் மற்றும் முறைசாரா துறைகளின் பங்களிப்புடன் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் ஒரு விரிவான கொள்கை தற்போதைய நிறுவன கட்டமைப்பிற்குள் உருவாக்கி செயற்படுத்தப்படும்.
தற்போது, தங்கள் பணியை நிறைவுசெய்து ஓய்வு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 720,000ஐ தாண்டியுள்ளது. 2024-ம் ஆண்டு அரசு ரூ. 434 பில்லியனுக்கும் அதிகமான நிதியை ஓய்வூதிய கொடுப்பனவாக ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் வாழ்க்கையை ஆன்மீகம், சமூகம் மற்றும் பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். அந்த இலக்கை மனதில் கொண்டு, ஒவ்வொரு பிரஜைக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுள்ள ஒரு விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவதில் நீங்களும் நிச்சயம் ஒரு பங்காளியாக இருப்பீர்கள்.
அரச சேவையில் பல வருட அனுபவங்களையும் வாழ்நாள் முழுதும் பெற்ற சிறந்த மனப்பாங்குகளையும் நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு வழங்கி தொடர்ந்தும் ஒரு முனைப்பான பிரஜையாக சமூக முன்னேற்றத்திற்கு நீங்கள் பங்களிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்ந பணி ஓய்வு வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள்.
பிரதமர்
ஹரிணி அமரசூரிய
நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK