இந்தோனேஷியாவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்பு

 1966 ஆம் ஆண்டின் பின்னர் நியமிக்கப்பட்ட இந்தோனேஷியாவின் மிகப்பெரும் அமைச்சரவை இன்று (21) பதவியேற்றது.


இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி ஜொகோ விடோடோவின் (Joko Widodo) அமைச்சரவையில் 34 பேர் மாத்திரமே அங்கம் வகித்தனர்.


இந்தோனேசிய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் 1966 ஆம் ஆண்டிலேயே இறுதியாக 100க்கும் மேற்பட்டோர் அமைச்சரவையில் அங்கம் வகித்தனர்.


இந்நிலையில், புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ (Prabowo Subianto) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று (21) பதவிப்பிரமாணம் செய்தது.


இதற்கமைய 48 அமைச்சுகளுக்காக புதிய ஜனாதிபதி நியமித்த அமைச்சரவையில் 109 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர்.




Fazu

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்