ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள், ஈரான் மற்றும் மியன்மார் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அந்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.
மேலும் வலுவான சர்வதேச பங்காளித்துவத்தை பேணுவதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், உலகின் அனைத்து நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகள், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK