இம்மடல் தென்கிழக்கு வாசலில் இருந்து வரையப்படுகிறது.
உங்கள் அழகிய முற்றத்திலிருந்து ஓர் இளமையில் அனுபவம், முகாமைத்துவ பட்டதாரி, சமூக சேவகன், தொழிலதிபர், பல்லின சமூகத்துக்குள் சராசரி மனிதனாய், தலைமைத்துவ பன்புகளோடு தாரிக் என்றொருவர் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாராமே என்று சமூகவலைத்தளங்களில் கானக்கிடைத்தது.
உங்கள் ஊரினை நான் கண்டது கிடையாது ஆனால் இப்படி ஒரு வேட்பாளரின் வருகையினால் அவ்வூரினைப்பற்றி அலசுகிறேன்.
சரி, சுருக்கமாக விடயத்துக்கு வருகிறேன்.உங்கள் மாவட்டம் கிழக்கைப் போன்று அரசியல் முதிர்ச்சியோ, ஈடுபாடோ மிக மிகக் குறைவே, அவ்வாறான கள நிலவரம் இருக்கையில் ஏன் இவர் வேட்பாளராக முன்வந்தார்.
அதை விவரிக்க நேரமில்லை, உங்கள் பக்கம் என் கழுகுப் பார்வையை செலுத்துகிறேன்.
அது முற்றத்து மல்லிகை ஏன் எதற்கு என்ற வாதத்திற்கு நேரமில்லை. "அதன் வெற்றியில் முதலில் கைகோர்த்த, சவால்களை எதிர்கொண்ட, தயக்கமின்றி வெற்றி நோக்கிப்புறப்பட்ட ஒருவன் நான்" எனும் வேட்கையோடு புறப்படுங்கள் இன்ஷாஅல்லாஹ் 14ம் திகதி அதன் வெற்றி வாடகை ஒவ்வொரு உள்ளத்தை உருக்கி ஆனந்தககண்ணீராய் சொட்டும்!.
அன்பர்களே இறுதயாக ஓர் அன்பான வேண்டுகோள் நாச்சியாதீவு வரலாற்றில் வரலாற்றுத் தவறினை இழைத்து விடாதீர்கள்.
அரசியல் அதிகாரமும்,சமூகசேவகனும் எனும் அந்நற்பெயருக்கு பூட்டுப் போட்டு விடாதீர்கள்.
தள்ளி நிற்பவரை திட்டாதீர்கள், தாராளமாய் தட்டி அணையிங்கள், சமத்துவமாய், சமூகமாய் சாதித்துக் காட்டுங்கள்.
என் கிழக்குப் பார்வை உம் முற்றத்து மல்லிகையின் வெற்றியை நோக்கி நகர்த்தப்படுகிறது.
நன்றி
F.மனால்.F
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK