வைத்தியசாலைகளும் மாபியா கும்பலும் ..

 

(Sameha Zafeer)

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முதுகு, கால் வலியால் மிகவும் வேதனை பட்டுக்கொண்டிருந்தேன் ... 

 திடீர் என ஒரு மாதத்தித்ற்கு முன்பு , அதிகாலை எளும்பும் போது , எழுந்து நிற்க முடியாமளும் , நடந்து கொள்ள முடியயாமலும் போய் விட்டது . அவ்வளவு பிடிப்பு பிடித்து கொண்டது ... 

பார்மசியில் மருந்துகள் வாங்கி எடுத்து கொண்டேன் ... ஒரு வாரமாக பிள்ளைகளும் , கணவரும் கதிரையில் இருக்க வைப்பதும் , எழுப்பி விடுவதுமாக இருந்தது .. நாள் செல்ல செல்ல முதுகின் முள்ளந்தண்டிலும் , காலிலும் வலி ஏற்பட தொடங்கியது ... 

இது பிடிப்பு இல்லை வைத்தியரை நாடுவோம் என்று , சில பேர் ஒரு வைத்தியரை சொன்னார்கள் . நல்ல சேர்ஜன் அனுபவும் உள்ளவர் அவரிடம் போய் காட்டுங்க என்றார்கள் ..

அப்போதும் , மகளின் தோழியின் அம்மா ஒருவர் சொன்னார் அவர் ஒரு சிடு மூஞ்சி காரன், ஆறுதலாக கேட்க மாட்டார் என்று .. .. அதற்கிடையில் அந்த வைத்தியரை புக் பண்ணி விட்டார் கணவர் . 

அந்த நாளும் வந்தது மாலை 6 மணிக்கு எனக்குரிய நேரம் தரப்பட்டிருந்தது . மாலை 5.30 க்கெல்லாம் அந்த வைத்தியசாலைக்கு சென்று விட்டோம் . 10 பேர் போல அந்த வைத்தியருக்காக காத்துக்கொண்டிருந்தார்கள் .. . 

6 மணியாகியும் வைத்தியர் வரவில்லை ... 6.30 ம்ம்ஹும் ,7.00 ம்ம்ஹும் 7.30 ம்ம்ஹும் .... வரவே இல்லை அவர் ..

என்னால் இருக்கவே முடியாமல் வலியாக இருந்தது ..அவரிடம் காட்ட கொண்டு வந்திருந்த சிறு குழந்தைகள் எல்லாம் அழ தொடக்கி விட்டன ... எனக்கு பக்கத்தில் திருகோணமலையில் இருந்து வந்திருந்த ஒரு வயதான மனிதர் ... புலம்பிக் கொண்டே இருந்தார் ... '' இந்த டாக்டரை இன்னும் காணவில்லை நான் ஊருக்கு போவதற்காக இரவு 8.30 மணிக்கு பஸ் புக் பண்ணி வைத்திருக்கிறேன் .. இவர் எப்போ வந்து, எப்போ காட்டி, நான் ஊருக்கு போவது ? என்று எங்களிடம் சொல்லி கொண்டார் . 

7.45 க்கு வைத்தியர் வந்தார் .. எங்களுக்கு முன் புக் பண்ணியவர்கள் சென்று கொண்டிருந்தார்கள் ... எங்களுக்கு பிறகுதான் அந்த வயதான மனிதர் போக வேண்டும் .. தந்தை போல் இருக்கும் அவரை முந்தி கொண்டு எனக்கு போக மனமில்லை .. கணவரிடம் சொல்லி விட்டு முதியவரை அனுப்பினோம் ...

அப்புறம் நான் போனேன் .. என் வருத்தங்களை சரியாக சொல்லி முடிக்கவும் இல்லை ... என்னை சரியாக அவர் கவனிக்கவும் இல்லை .. 

வைத்தியர் சொன்னார் .. இரவு இந்த வைத்தியசாலையில் அட்மிட் ஆகுங்க .. காலையில் X - ray , ஸ்கேன் , எடுப்பாங்க ..1 இலட்சம் போல ஆகும் .. என்றார் .. ....

நான் கேட்டேன் .. எதுக்கு அட்மிட் ஆகணும் டாக்டர் ? இரவைக்கு ஏதும் ட்ரீட்மெண்ட் செய்விங்களா என்று .. இல்லை என்றார் ... எனக்கு கோவம் வந்தது .. நான் சொன்னேன் .. நாங்கள் கொழும்பில் தான் இருக்கிறோம் .. எதுக்கு அட்மிட் ஆகணும் ? ரிப்போர் கொண்டு வந்து காட்டினா சரிதானே என்று சொன்னேன் ... 

அவருக்கு கோவம் வந்து விட்டது .. ஒரு பேப்பரை எடுத்து அதில் உள்ள சிலவற்றிற்கு வட்டம் போட்டு தந்தார் ...இதை எல்லாம் எடுங்க .. இந்த வைத்தியசாலையில்தான் எடுக்க வேண்டும் ..வெளியே எங்கும் எடுக்க வேண்டாம் .. அந்த படங்கள் தெளிவாக இல்லை .. இந்த வைத்தியசாலையில்தான் தெளிவாக x ray , ஸ்கேன் பண்ணக் கூடிய மெஷின் உள்ளது ...இங்கதான் எடுக்க வேண்டும் என்று 2 , 3 முறை கண்டிப்புடன் சொல்வது போலவே சொன்னார் ... சரி என்று அந்த பேப்பரை வாங்கி எடுத்து கொண்டு .. நான் சொன்னேன் வலியாக இருக்கு எனக்கு இப்போதைக்கு மெடிசின் குடுங்க என்று கேட்டேன் ... 

இரண்டு மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு சொன்னார் .. இந்த மருந்துகளை இங்கே பார்மசியில் எடுங்க .. 3 நாளைக்கு கொடுத்து இருக்கேன் .. 4 ம் நாள் ரிப்போர்ட் எல்லாம் கொண்டு வந்து காட்டுங்க .. ரிப்போர்ட் கட்ட வரும் பொது மீண்டும் அப்பொய்ன்மெண்ட் வைத்துதான் வர வேண்டும் என்றார் ...

நான் கேட்டேன் இல்லியே டாக்டர் 7 நாட்களுக்குள் ரிப்போர்ட் காட்டலாம்தானே எதுக்கு மீண்டும் அப்பொய்ன்மெண்ட் என்றேன் .. இல்லை அப்பாபின்ட்மென்ட் வைத்துதான் வரவேண்டும் ..

3 நாளைக்குள் வந்து காட்டாட்டி லொக் விழுந்து வீல் செயர்ல .. சாவுற நிலைமையிலதான் வருவா என்றார் ... எனக்கும் , கணவருக்கும் அவ்வளவு கோவம் வந்திச்சு ... எனக்கு உண்மையாவே ஏசி விட்டு வரத்தான் எண்ணம் வந்தது ... கோவத்தை அடக்கி கொண்டு வெளியே வந்து விட்டோம் ..

அந்த வைத்தியசாலை பார்மசியில் மறந்தும்எடுக்க விருப்பமில்லாமல் .. 

வைத்தியருக்கு முதலில் ஒரு time menegment இல்லை ..

நோயாளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்ற தன்மையே தெரியாத வைத்தியர் ..

மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரிடம் கூட எவ்வளவு மென்மையாக பேசவேண்டும் வைத்தியர்கள் .. சாவுற நிலைமையில்தான் வருவாய் என்று சொன்னாரே .. இவரெல்லாம் ஒரு வைத்தியர் 

நான் நினைக்குறேன் அந்த வைத்தியசாலையில் பின் கதவால் பணம் என்னமோ சொல்லுவாங்களே கொம்மிஸ்.. வருவதாக இருக்க வேண்டும் .. அவரிடம் வருவோரை எல்லாம் அட்மிட்பண்ணி பணம் பறித்தது கொடுப்பதற்கு.. 

மீண்டும் அவரிடம் போவதற் கு எனக்கு விருப்பம் வரவில்லை அவர் நடந்து கொண்ட முறை எனக்கு பிடிக்கவும் இல்லை ..

பின் வேறொரு வைத்திய சாலையில் வேறு ஒரு வைத்தியரிடம் சென்றேன் .. ஆறுதலாகவும் அமையாகவும் அவர் என்னிடம் கேட்டு விட்டு x ray , blood full ரிப்போர்ட் ஒன்றும் எடுக்க சொன்னார் ... இப்போதைக்கு MRA எடுக்க தேவையில்லை ... என்று மருந்துகள் தந்தார் .. 7 ஆம் நாள் அன்றே, அவரிடம் ரிப்போர்ட் கொண்டு காட்டினோம் .. அனால் மீண்டும் appointment வைத்து போகவில்லை ... x ray யில் பிரச்சனைக்கு எதுவும் இல்ல என்றும் ... உடம்பில் விட்டமின் டி, கல்சியம் மிக குறைவாக உள்ளது என்று அதனாலேயே நரம்பில் வலி உள்ளது என்று பிசியோதெரபி செய்யுமாறும், மருந்துகளும், வைட்டமின் டி, கால்சியம் உணவுகளை அதிகம் சாப்பிடுமாறும் அமைதியாக சொல்லி தந்தார் 

இது இவ்வாறு இருக்க , இரவு வீட்டிற்கு ஊரில் இருந்து உறவினர்கள் வந்தார்கள். உறவு முறையான மாமி ஒருவர் அந்த money மாபியா வைத்தியரிடம் சென்றிருக்கிறார் .. அவரையும் அவர் அட்மிட்பண்ணவைத்து , இல்லாத ரிப்போர்ட் எல்லாம் எடுக்க வைத்து அவர்களிடம் நல்லாவே பணம் பறித்து விட்டுத்தான் விட்டிருக்கிறார் அந்த மாபியா கும்பலில் உள்ள அந்த வைத்தியர் . நான் என் கதையை சொன்ன போதுதான் அவர்களும் இதை சொன்னார்கள் ...

Dr. Ramanathan Archchuna அவர்களே! , சாவகச்சேரியில் மட்டுமில்லை இந்த நாட்டில் எங்குமே மக்களிடம் பணம் பறிக்கும் ஒரு வைத்திய மாபியா கும்பல் இருக்கத்தான் செய்கிறது .... 

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்