1400 கோடி ரூபா முதலீட்டில் முத்தையா முரளிதரன் ஆரம்பிக்கும் தொழிற்சாலை..

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், கர்நாடக மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா முதலீட்டில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிர்பானம் மற்றும் இனிப்பு வகை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்காகவே முத்தையா முரளிதரன் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கர்நாடக மாநில பாரிய மற்றும் சிறுத் தொழிற்துறை அமைச்சர் M.P.பாட்டிலை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையின் விரிவாக்கமாகவே, இந்தியாவில் தொழிற்சாலை ஆரம்பிக்க முத்தையா முரளிதரன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழிற்சாலை நிர்மாணத்திற்காக 46 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்