பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரதேசமட்ட செயற்பாட்டு அணியின் விஷேட அமர்வு

நூருல் ஹுதா உமர்

பிரதேச மட்டங்களில் காணப்படும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பொறுப்புவாய்ந்த அரசு, சமூக மட்டத் தலைவர்கள் பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் பிரதேச மட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரதேசமட்ட செயற்பாட்டு அணி (பாலினம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரிவுப் பணிக்குழு) ஒன்று அதனூடாக சேவைநாடிகளுக்கு உதவி வருகின்றது.

இச்செயலணி மூலம் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு, சட்ட உதவிகள், அவர்களது உடல் நலம், அவசர உதவிகள், சமூகப் பொறுப்புக்கூறல் மற்றும் பல்துறைசார்ந்தவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது.

இறக்காமம் பிரதேசத்திற்கான பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான செயலணி (SGBV Task Force) இன் விஷேட அமர்வு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (பதில்) எம்.எம்.கே. சாஜிதா அவர்களின் ஒருங்கிணைப்பில் இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் அமர்வில், பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்களான எஸ். கங்கேஷ்வரி, ஞா. உசா நந்தினி மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஜி. நிசம்மா, பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல். ஜௌஸ், மதீனா பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜௌபர், பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச பிரதான பள்ளிவாசல் தலைவர்கள், இறக்காமம் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் பிரிவு, , மகளிர் சங்க சிறுவர் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.







BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK