பராட்டே சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது போலவே,வியாபார முயற்சியான்மைகளை மீண்டும் கட்டியெழுப்ப மூலதனத்தை வழங்க நடவடிக்கை எடுங்கள்.

 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பிற்கு 52% பங்களிப்பை வழங்குகின்றனர்.நடுத்தர தொழில் முயற்சிகளும் தற்போதைய பொருளாதாரத்தின் இயங்கும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மற்றும் வங்குரோத்து நிலை ஆகிய மூன்று நெருக்கடிகளால் இத்தொழில்துறை முடங்கியது.நாடு இறுதியில் வாங்குரோடு நிலைக்குச் செல்ல நேரிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பராட்டே சட்டம் மூலம் இவர்களது சொத்துக்கள் ஏலம் விடப்படும் சூழ்நிலையில், இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாராளுமன்றத்துக்கு வெளியேயும் குரல் எழுப்பியதன் விளைவாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் சொத்துக்களை ஏலம் விடுவதை தற்காலிகமாக நிறுத்த சில வாரங்களுக்கு முன்பு முடிவெடுத்த போதிலும், நாட்டில் அரசாங்கமும் நிதியும் இல்லை. இந்த ஏல நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆனால்,மீண்டும் ஒரு சுற்றறிக்கை மற்றும் வர்த்தமானி மூலம் அரசாங்கம் இந்த முடிவை சட்டமாக மாற்றத் தயாராகி வருகிறது.இது நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கிடைத்த நிவாரணமாகும். மக்களின் பொருளாதார செயல்முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க அரசாங்கம் மூலதனத்தை வழங்க வேண்டும். இதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் தொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தொழில்களில் ஈடுபடுவர்.இதன் ஊடாக வருமானம் ஈட்டி, வட்டி மற்றும் கடனை செலுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 121 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா,திவுலப்பிட்டி, கடுவெல்லேகம மகா வித்தியாலயத்திற்கு

வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

IT பொறியாளர்களின் சொர்க்கபுரியாக நாட்டை மாற்றுவோம்.

நமது நாட்டில் ஐடி திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கி, ஐடி பொறியாளர்களின் சொர்க்க தேசமாக இலங்கையை மாற்றுவோம்.ஐடி பணியாளர்களை ஏற்றுமதி செய்யும் இயலுமையை உருவாக்க வேண்டும். உள்நாட்டு சேவைத் தொழிலின் ஊடாக மட்டுமே பணம் ஈட்டும் பிற்போக்குத்தனமான பலவீனமான கொள்கையைக் கொண்ட நாடாக எம்மால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு



Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK