இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்: இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்து

இணைய வழி பாதுகாப்புச் சட்டமூலத்தினை மீள்பரிசோதனை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

"புதிய இணையவழி பாதுகாப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்" என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும்,"சிவில் சமூகம் மற்றும் தொழில் குழுக்களின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்கும், மனித உரிமைகள் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்வதை பரிசீலிக்குமாறு தாம் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளான இந்தச் சட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நேற்று சட்டமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK