ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்..!!!


(எஸ்.சினீஸ் கான்)

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்ற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்றது.

இதன்போது சமகால அரசியல் விவகாரம் தொடர்பாக முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி மற்றும் தற்போதைய நிலமைகள் சம்மந்தமாகவும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் பேசப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திற்கு உதவுவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜப்பான் நாட்டு தூதரக பிரதிநிகள் பாராளுமன்ற உறுப்பினருடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அல் - ஹிக்மா பவுண்டேசனின் தலைவர் இபாதுல்லாஹ் மௌலவி அவர்களும் கலந்துகொண்டார்.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK