கல்லஞ்சியாகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு Smart Board வழங்கி வைப்பு.


வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் அ/ கல்லஞ்சியாகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான Smart Board வழங்கி வைக்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் எஸ்.எம். நுவைஸ் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கான நிதியுதவியினை வன்னி ஹோப் அவுஸ்திரேலியாவின் Dr. மாலதி வாரன் அவர்கள் வழங்கியிருந்ததோடு இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக வன்னி ஹோப் அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.டி.எம். பாரிஸ் மாவட்ட இணைப்பாளர் எஸ்.எம். அக்ரம், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோரும் விஷேட அதிதியாக இப்பலோகம வலயக்கல்வி பணிப்பாளர் சட்டத்தரணி நிசாம் அவர்களும்  கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறான சேவைகளை தனது மாவட்டத்தில் மேற்கொள்வதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதோடு வன்னி ஹோப் அவுஸ்திரேலியாவின் தலைவர் ரஞ்சன் சிவஞான சுந்தரம் அவர்களுக்கும் இதற்கான நிதியுதவியினை வழங்கிய Dr. மாலதி வாரன் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார் 









Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Previous Post Next Post