இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அவரது விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நாளை (23) ஆரம்பமாகியுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ள உள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடரின் போது பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தனுஷ்க குணதிலகதாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் தீர்மானித்துள்ளது.
ஆனால் அவரது விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் உள்ளூர் போட்டிகளில் விளையாட அவர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்காததால் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணையின் பின்னர், அவரது தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தனுஷ்கவைப் பிரதிநிதித்துவப்படுத்திய SSC கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவர் சமந்த தொடன்வெல தெரிவித்தார்.இதன்படி, SSC ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட தனுஷ்க குணதிலக்கவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன் மூலம் தற்போது தொடங்கியுள்ள இன்டர் கிளப் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க விளையாட உள்ளார்.
Advertisement - செந்தீ குறும்படம் | Senthi Short Film
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK