லஞ்சம் பெற்று சிக்கிய காதியார் - மௌலவிக்கு விளக்கமறியல் உத்தரவு


கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த காதி நீதிவான் ஒருவர் இலஞ்சக் குற்­றச்­சாட்டின் பேரில் கடந்த வாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு கறுவா தோட்ட பொலிஸில் ஒப்­ப­டைக்கப்பட்­டார்.

பொலிஸார் சந்­தேக நப­ரான காதி நீதிப­தியை கொழும்பு பிர­தம நீதிவான் நீதி­மன்றில் புதன்கிழமை ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து நீதிவான் அவரை எதிர்­வரும் டிசம்பர் 12ம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டார்.

ஒரு­வ­ருக்கு ஆவ­ண­மொன்­றினைக் கைய­ளிக்கும் போது ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்ட குற்­றச்­சாட்டின் பேரில் சந்­தே­க ­நபர் ஸ்த­லத்­தி­லேயே இலஞ்ச ஊழல் அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டார்.

இது தொடர்பில் விடி­வெள்ளி காதி நீதி­வான்கள் போரத்தைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது சட்­ட­ரீ­தி­யான பண­ப் பரி­மாற்­றங்­க­ளுக்கு உரிய ரசீது வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அவ்­வா­றல்­லாது பணம் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தெ­னவும் ஏற்­க­னவே காதி நீதி­ப­திகள் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்கப்பட்­ட­து.

 



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK