வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய சந்திப்பு


வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவில் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது தெரியவந்துள்ளது.

குறித்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டமையும் விசேட அம்சமாகும்.

அவர்கள் தமது அரசியல் எதிர்காலம் குறித்து தம்மிக்க பெரேராவுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என அண்மைய நாட்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK