கொள்ளையர்களை நண்பர்களாக்கும் கச்சிதமான கையாளுகையின் முத்திரை நயீமுல்லாஹ்!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகத்திற்கும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் புத்தளம் மக்களின் 30 வருட கனவு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியூடாக நனவாகியது.

கடந்த பொதுத் தேர்தலில் தராசு சின்னத்தினூடாக புத்தளம் மக்கள் பாராளுமன்ற உறுப்பினராக அலி சப்றி ரஹீம் அவர்களை அந்த உயர் சபைக்கு அனுப்பி அழகு பார்த்தனர்.

புத்தளம் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை, பெரிய பள்ளிவாசல், இஸ்லாமிய நிறுவனங்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் என்பவற்றின் வேண்டுகோளுக்கிணங்க பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஏற்படுத்திய கூட்டமைப்பின் பிரகாரம் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் (MNA) ஊடாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிட்டிருத்தமை யாவரும் அறிந்த விடயம்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி றஹீம் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் ஒன்பது வருட கால உறுப்பினர் என்பதனாலேயே கடந்த தேர்தலில் அவருக்கான வாய்ப்பு எமது அ.இ.ம.கா சார்பாக தராசு சின்னத்தில் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கவரி திணைக்களத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தங்கம் கடத்தியமையை ஆதரபூர்வமாக உறுதி செய்து மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் உடனடியாக கைது செய்யப்பட்டார் அலி சப்ரி றஹீம் எம்.பி.

நிரூபனமான குற்றத்தின் அடிப்படையில் கைதின் பின்னர் 7.5 மில்லியன் தண்டப்பணமும் செலுத்தினார் இதே எம்.பி.

இந் நிலையில்,

புத்தளம் மக்களின் பெரும்பான்மை முஸ்லீம் வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அம்மக்களையும், மண்ணையும் தலைகுனிய வைத்த பெருங்குற்றமிழைத்த இவரை உயர் சபையான பாராளுமன்றத்தையும் அவமானம் செய்தமையாகக் கொண்டு அவருக்கு எதிரா் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொண்டது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

இதன் பிரகாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடமானது பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கிவிட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸால் நீக்கப்பட்டாலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு நீக்காத ‘அயன் குழையாத சேட்’ போட்ட மாப்பிள்ளையாக ரஹீம் எம்.பியாக இருப்பார்.

உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு அக்கட்சியின் செயலாளர் நயீமுல்லாஹ் அவர்களிடம் எழுத்து மூலமான கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

இரு கட்சிக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அ.இ.ம.கா கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு உடன்பட்டு மு.தே.கூ கட்சியானது அலி சப்றி ரஹீமை உறுப்புரிமையில் இருந்து நீக்கி, அவருக்கு அடுத்தபடியாக நபரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு குறிப்பிடப்பட்டது.

இதே நேரம், கடந்த இரு வாரத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல கடிதத்திற்கு முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக எந்த விதமாக பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்து தங்கம் கடத்திய எம்.பி.யை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் போல காப்பாற்ற முனைகிறார் இந்த நயீமுள்ளாஹ்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாராட்டிய இந்த கூட்டமைப்பானது வெற்றியின் ஸ்தீரனத்தன்மையை உதாசீனம் செய்து விட்டு கல்லா மலையானு இருக்கின்றது.

இவ்வாறான குறுகிய சுயநல கட்சிகளின் செயற்பாட்டினால் எதிர்காலத்தில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இணைந்து எவ்வாறு செயற்படும் என்கிற பாரிய கேள்வி மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.

எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலைப்பாடும், எதிர்க்கட்சிகள் இல்லாத முஸ்லிம் அரசியலை ஸ்தாபிக்க வேண்டும் என்ற கனவும் உருக்குழைக்கப்பட்டு சான்று இல்லாத தள்ளாட்டத்தை நயீமுள்ளாஹ் குழுவினர் விதைக்க முனைகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நயீமுள்ளாஹ் என்பவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கிமின் நெருங்கிய உறவினர் என்பதனால் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து இருவரினாலும் கூட்டினைந்த திட்டமிடலின் அடிப்படையிலான றஹீமை காப்பாற்றும் சாணயக்கியமோ என்பதும் இங்கு ஒப்பனையாகிறது.

இதே நேரம் மக்களால் தற்போதைய சூழ்நிலையில் நிராகரிக்கப்பட்டு நிற்கும் அலி சப்ரி றஹீம் அடையாளமற்று போய் விடுவார் என்கிற ஆழ்ந்த இரங்கலால் நயீமுள்ளாஹ்வின் சைகைக் கயிற்றை தன் வசம் மடக்கி தனது அரசியல் சாணக்கியத்தால் அடுத்த தேர்தலில் அலி சப்ரி றஹீமை மு.கா. பயணிக்க வைப்பதற்கான முன் ஆயத்தமாகக் கூட இந்த காப்பாற்றும் படலம் அமையலாம் என்பதும் புலனாகிறது.

நம்பிக்கைக்கும், மக்கள் ஆணைக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய கட்டாயத் தேவையுள்ள இப்படியான கட்சிகளின் உண்மை முகத்திரை அடுத்துவரும் காலங்களில் நிச்சயமாக துண்டாடிக் கிழிந்து சின்னபின்னமாகும் என்பதிலும் ஐயமில்லை.

எனவே, குற்றம் நிரூபிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களை உடனடியாக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விளக்குவது மட்டுமல்லாது இவருக்கு அடுத்த வரிசையிலுள்ள நபரை எம்.பி.யாக்கி புத்தளம் மக்களின் ஆணையை காப்பாற்ற வேண்டும்.

அமீர் அப்fனான்,

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்,

இலங்கை.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK