இந்த ஒக்டோபர் மாதம், கனேடிய அரசு முதல் தமிழ் கனேடியனை பெண்கள் வரலாறு மாதத்தில் கொண்டாடுகின்றது. இந்த அங்கீகாரம் அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உட்புரிவில் சமத்வம் முக்கியபடிக்கு அவர் அர்ப்பணம் கொண்டதற்காக என்பதாகும்.

கனடிய  அரசாங்கம்   இந்த ஒக்ரோபர் 2023  (பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் கனடா – Women and Gender Equality Canada) பெண்களின் வரலாற்று
மாதத்திற்காக டாக்டர் மெலனி ரெட்னத்தை அங்கிகரித்திருக்கிறது. 1992 முதல்  கனடா அரசாங்கம் கனடிய பெண்கள் மற்றும், சிறுமிகளின் சாதனைகளை  சிறப்பித்துகாட்டியிருக்கிறது.  இந்தவருடம், WAGE என்ற கருப்பொருளில்,  தன்  லென்ஸ் மூலம் பெண்களின்  பன்முகத்தன்மையை கொண்டாடுதல், பல்வேறு பின்னணியில் பல்வேறு துறைகளில் 11 கனடிய பெண்களை  தெரிவுசெய்திருக்கிறது.

அவர்கள் மாற்றத்தை உருவாக்கி நன்கு  திட்டமிட்டு  நல்லதொரு  எதிர்காலத்தை வளர்த்து வருகின்றனர். டொக்டர் ரெட்ணம் அவர்கள் தான் வளர்ந்து,  வாழ்ந்து,  பணி செய்கின்ற ஸ்காபுரோவில் பலமான ஒரு  வலுச் சேர்க்கும் வேரைக்கொண்டுள்ளார். 

அவர் நியூரோபயாலஜியில் UTSC PHD பட்டதாரியாவார். அங்கு அவருடைய  ஆராட்சி  மூளையின்  நோய் எதிர்ப்பு  செல்களான மைக்ரோக்லியா, பக்கவாதத்திற்குப்பிறகு  வீக்கத்தை எவ்வாறு  கட்டுப்படுத்துகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது.

அறிவியல் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி பேசுவதற்காக, டாக்டர் மெலனி ரெட்னம் கனடா முழுவதும் பயணம் செய்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கனடியப் பெண்களுக்கான சங்கத்துடன் (Society for Canadian Women in Science & Technology) கனடா முழுவதும் அவரது பணி பரவியுள்ளது. நகர மட்டத்தில்  ரொறன்ரோ , ஸ்காபுரோ பல்கலைக்கழகம்  மற்றும் ரொறன்ரோ பாடசாலைகள் மூலம் அவர் 1000 க்கு மேற்பட்ட தொடக்க, உயர்நிலைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டியாக  உள்ளார். மேலும்  அவர் அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத்தின் மூலம் காலநிலை மாற்றம், உணவு பற்றாக்குறை, போக்குவரத்து போன்ற இன்றயகாலங்களில் மிகவும் இன்றியமையாத உலகளாவிய சவால்களை சமாளிக்க தன்னை பின்பற்றும் மாணவர்களை ஊக்குவிக்கிறார். நீங்கள் கனேடிய அரசாங்கத்தின் இடுகையை Linkedin மற்றும் Facebook இல் பார்க்க முடியும்.
BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK