பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயன்ற பிரதான சந்தேக நபர் கைது கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்படும் போது சந்தேக நபரிடம் 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.