கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது” என்று -DP கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

‘டி.பி.கல்வி நிலையம் மற்றும் தொழிநுட்ப வளாகத்தின் 60 ஆவது கிளை கண்டி மாவட்டத்தின் வல்கம் பிரிவிலுள்ள புசெல்லாவ ஸ்ரீ மணிந்தாராம விகாரையில் டிபி கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேராவினால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே டிபி கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்