வரலாற்றுச் சாதனை... ஹோறாபொளையில் முதல் வைத்திய மாணவன்..


அனுராதபுர மாவட்டம், கெகிராவை தொகுதியில் 400 வருட  வரலாற்றைக் கொண்ட ஹோறாபொளையில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக சகோதரர் பர்ஸான்  உயர்தரத்தில்  சிறப்புச் சித்தி பெற்று வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அ/ஹோறாபொளை.மு.வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சையில் இதுவரை  சிறந்த பெறுபேறுகளில் ஒன்றாகவும் முதன்மைப் பெறுபேறாகவும்  8A,B சித்திகளை பெற்றதுடன் தற்பொழுது உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் A,2B சித்திகளை  பெற்றுள்ளார். இது ஹோறாபொளை வரலாற்றில் முதல் தடவையாகும்.

பல தடைக்கல்களைத் தாண்டி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு உதாரணமாக இவர் காணப்படுகின்றார்.

சமூகத்தின் மாற்றம் கல்வியிலே காணப்படுகின்றது. சமூகத்தை கல்வியே உயர்த்தும் என்ற அடிப்படையில் வைத்தியர் இல்லாத மிகப்பெரும் குறையாக எமது கிராமத்தில் காணப்பட்ட இந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கூடியதாக முதல் வைத்தியராக உருவெடுப்பதற்கும் எதிர்காலத்தில் இவரைப் போன்று பலர் உருவெடுப்பதற்கும் வாழ்த்துக்கள்.

ஆஷிக்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK