லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; இருவர் பலி

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் பெல்மடுல்ல – ரில்லேன பகுதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரி – பலாங்கொடை, பல்லெபெத்த பகுதியை சேர்ந்த 53 மற்றும் 59 வயதான இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதியும் முச்சக்கரவண்டியில் பயணித்தவரும் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பெல்மடுல்ல பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK