தேர்தலுக்கு நிதியில்லை..! நிதியில்லை..! நிதியில்லை - பாராளுமன்றில் மிகத் தெளிவாக அறிவித்தார் ரனில்.


தேர்தலை பிற்போடுவது தமது எண்ணம் இல்லையெனவும், நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதை சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லையெனவும், தேர்தலுக்கான நிதி இல்லையெனவும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வாக்களிப்புக்கு செல்வதாக எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், மக்களுக்கு பிரச்சினையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்குவதுதான் உங்களுக்கு பிரச்சினையா, எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin