இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

அறிவிப்பை வெளியிட்டுள்ள SLBFE, மேற்படி வேலை வாய்ப்புக்கான விண்ணப்பப் படிவங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk  ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் நாளை (02) பிற்பகல் 04.30 அல்லது அதற்கு முன்னதாக SLBFE யிடம் ஒப்படைக்க வேண்டும் என SLBFE மேலும் தெரிவித்துள்ளது.