வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் குழப்பம் – ரூ. 100 மில்லியனை முற்பணமாக கோருகிறது அரச அச்சகம்


தேர்தல் ஆணைக்குழு அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு 18 மில்லியன் ரூபா நிலுவைப் பணத்தை வழங்க வேண்டியுள்ளது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்

கடந்த தேர்தல் உள்ளிட்ட வேறு நடவடிக்கைகளின் போது அரசாங்க அச்சகத்திணைக்களம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள சேவைக்காக இந்தப் பணத்தை வழங்க வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தேவையான நிதியை அந்த திணைக்களம் திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று அரசாங்க அச்சகத்திணைக்களத்திற்கு பல்வேறு நிறுவனங்கள் மூலமும் கிடைக்க வேண்டிய நிலுவைப் பணத்தை அளவிடுவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து அரசாங்க அச்சகத் திணைக்களம் 100 மில்லியன் ரூபாவை முற்பணமாக கோரியுள்ள நிலையில் அந்த நிதியையும் தேர்தல் ஆணைக்குழு இதுவரை வழங்கவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK